சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் ஒருவர்.
புகார் அளித்த நபரின் பெயர் பி.கே. கருணா. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த இவர் அக்டோபர் 7ம் தேதி காலையில் கமிஷனர் அலுவலகம் வந்து வித்தியாசமான புகார் மனுவைக் கொடுத்தார்.
அதில் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். தன்னுடைய படங்களில் முக்கிய வேடம் கொடுப்பதாக கூறிய ரஜினி ஏமாற்றிவிட்டதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
அதைப் படித்துப் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து விட்டனராம். உடனே இந்த புகாரை எக்மோர் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரிக்கச் சொன்னதில் கருணா கூறுவது பொய் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.
Post a Comment