சென்னை: வரும் தீபாவளிக்கு சிறப்புத் திரைப்படமாக கமலின் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகிறது விஜய் டிவி.
கமல் - பூஜா குமார் - ஆன்ட்ரியா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம். இஸ்லாமிய சர்ச்சை, அரசின் தடை, இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக கமலின் அறிவிப்பு என பல பரபரப்புகளைப் பார்த்த படம் இது.
தமிழகத்தில் மட்டும் வெளியாகாமல், பிற மாநிலங்களில் வெளியானதால் மக்கள் வண்டி கட்டிப் போய் பார்த்த படம்.
ரிலீசான சில மாதங்களில் இப்போது சின்னத் திரைக்கு வந்துவிட்டது.
சமீப காலமாக புதிய படங்களாக ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி (ஆனா படம் பார்க்கும் நேரத்துக்கு சமமாக விளம்பரங்களையும் நீங்கள் பார்த்தாக வேண்டும்!). இப்போது மெகா படமான விஸ்வரூபத்தை ஒளிபரப்புவதன் மூலம், தீபாவளி ஸ்பெஷல் படங்களை ஒளிபரப்புவதில் பெரும் போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது விஜய் டிவி.
போற போக்கைப் பார்த்தால் தியேட்டர் கிடைக்காத வெறுப்பில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பப் போகிறார்கள்!
Vijay TV is telecasting Kamal's mega hit Viswaroopam as Diwali special.
Post a Comment