கவுதம் மேனனிடம் துருவ நட்சத்திரம் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையான ரூ 5 கோடியை அவரிடமே திருப்பித் தந்தார் சூர்யா.
கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் சூர்யா. ஆனால் கதை விஷயத்தில் அவருக்கும் கவுதம் மேனனுக்கும் ஒத்துப் போகாததால், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சூர்யா சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இந்த நிலையில் கவுதம் மேனனிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிட்டார். ஆனால் அவர் அட்வான்ஸ் தொகையுடன் கூடுதலாக பெரும் தொகையைத் தந்ததாக வெளியில் தகவல் பரவியது.
இதனையறிந்த சூர்யா தரப்பு, "வாங்கிய முன்பணத்தைத் தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சூர்யா, கவுதம் மேனனை வீட்டுக்கே வரவழைத்து அந்தத் தொகையை முழுவதுமாகக் கொடுத்துவிட்டார். இத்தனைக்கும் கவுதம் மேனனுக்காக காத்திருந்ததில் அவருக்கு பல கோடி ரூபாய் இழப்புதான்.
ஆனால் அட்வான்ஸ் தொகைக்கு மேல் கூடுதலாக அவர் 5 கோடி கொடுத்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அதுபோன்ற பொய்யான பெருமைகளை சூர்யா என்றுமே விரும்பியதுமில்லை. உண்மை வெளியில் தெரிந்தால் போதும்," என்றார்கள்.
Post a Comment