சென்னை: கொழுக் மொழுக் நடிகையின் அம்மா மகளின் காதல் விவகாரம் பிடிக்காமல் சொத்துக்களை எல்லாம் கமுக்கமாக தன் பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
கோலிவுட்டில் மளமளவென வளர்ந்து வந்த கொழுக் மொழுக் நடிகை தான் விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். காதலை ஒப்புக் கொண்டவர் 5 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகையின் டாக்டர் அம்மாவுக்கு மகளின் காதல் விவகாரம் பிடிக்கவில்லை போன்று. இதனால் அம்மாவுக்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதாம். படப்பிடிப்பில் கூட கேரவனுக்குள் இருவரும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொள்கிறார்களாம்.
எங்கே மகள் நம் கையை விட்டு போய்விடுவாளோ என்று பயந்த அம்மா கமுக்கமாக சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம். மேலும் புதிதாக வாங்கும் சொத்துக்களையும் தன் பெயரில் மட்டுமே வாங்குகிறாராம்.
காதலில் இருக்கும் நடிகையோ அம்மாவின் செயல் பற்றி தெரியாமல் தாய்க்குலத்துடன் மோதிக் கொண்டிருக்கிறாராம்.
Post a Comment