நடிச்சது போதும்... இந்த வருஷமே திருமணம்! - பாவனா

|

சென்னை: தமிழ் - தெலுங்கில் சுத்தமாக படங்களே இல்லாமல் போய்விட்ட நடிகை பாவனா, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

27 வயதாகும் பாவனாவின் சினிமா கேரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

தனது திருமணம் குறித்து பாவனா கூறுகையில், "திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பது உண்மைதான்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். திருமணத் தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.

நடிச்சது போதும்... இந்த வருஷமே திருமணம்! - பாவனா

திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வ. அதனால்தான் அதை நிதானமாக அறிவிக்கிறேன்.

என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்திப் படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது, அங்கெல்லாம் என்னிடம் யாரும் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டது இல்லை. என் வயதுள்ள பலர் அங்கு முன்னணி நடிகைகளாக உள்ளனர். 30 வயதுள்ள நடிகைகள் கூட அங்கு திருமணம் பற்றி சிந்திப்பது இல்லை.

ஆனால் இதையெல்லாம் இங்கு எதிர்ப்பார்க்க முடியாது. 30 வயதானாலே ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இது திருமணம் செய்ய சரியான நேரம் என்பதைப் புரிந்து கொண்டேன்," என்றார்.

 

Post a Comment