என்னத்த தீபாவளி: புலம்பித் தள்ளும் லீடரின் மாவட்ட படக்குழு

|

சென்னை: லீடர் நடிகர் நடிக்கும் மாவட்டம் படக்குழுவினருக்கு 3 மாத சம்பள பாக்கியாம். இதனால் படக்குழுவினர் என்னத்த தீபாவளி கொண்டாட என்று புலம்புகிறார்கள்.

லீடர் நடிகர் நடித்து வரும் படம் மாவட்டம். படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ஜரூராக நடக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தங்களால் கொண்டாட முடியவில்லையே என்று படக்குழுவினர் புலம்புகிறார்கள்.

காரணம் படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், டான்ஸர்கள் என்று யாருக்கும் கடந்த 3 மாதமாக சம்பளமே கொடுக்கவில்லையாம். முதலில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு சம்பளம் தருகிறோம் என்றார்களாம். அதன் பிறகு தீபாவளி பண்டிகைக்கு தருகிறோம் என்றார்களாம்.

இதனால் படக்குழுவினர் தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்றால் அவர்களுக்கு சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்களாம். ஏன் சம்பளம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று படக்குழுவினர் விசாரித்தால், லீடருக்கு ரூ.20 கோடியை கொடுத்தாச்சு. அப்படி கொடுத்தால் தான் அவர் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறினார்களாம்.

இதனால் தீபாவளி கொண்டாட முடியாமல் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

 

Post a Comment