சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜாவில் பிரபுவை இமிடேட் செய்து நடிக்க சிரமப்பட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கார்த்தி-காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா'. ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் நடந்தது.
நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
படத்தின் நாயகன் கார்த்தி பேசுகையில், "இயக்குனர் ராஜேஷின் ‘சிவா மனசுல சக்தி' படம் பார்த்தபோதே ராஜேஷுடன் ஒரு படம் பண்ணனும்னு நினைச்சேன்.
இப்ப அது நிறைவேறிடுச்சி. இந்த படத்தில் 80-களில் நடப்பதுபோல ஒரு காட்சி... அதில் பிரபு சார் போலவே கெட்டப் அணிந்து, அவரைப்போலவே நடிக்க வேண்டும். இதற்காக மிகவும் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இதை நம்மால் சரிவர செய்யமுடியாது என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன்.
ஆனால், இயக்குனர் பிடிவாதமாக சொன்னதால் இதை வெற்றிகரமாக செய்துமுடித்தேன். இப்படம் சிறந்த காமெடி படமாக வந்துள்ளது," என்றார்.
Post a Comment