ஸ்வேதா மேனனை உரசியதாக புகாருக்குள்ளான 73 வயது எம்.பி மீது வழக்கு

|

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஸ்வேதா மேனனை தேவையில்லாமல் உரசியும், நெருக்கமாக நின்று தொட்டும் சில்மிஷமாக நடந்து கொண்டதாக புகாருக்குள்ளான கேரளாவைச் சேர்ந்த 73 வயது காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை ஸ்வேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்த நிலையில் பீதாம்பர குருப்பு மீது ஸ்வேதா பரபரப்புப் புகாரைக் கூறியிருந்தார். அதாவது, கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறினார்.

ஸ்வேதா மேனனை உரசியதாக புகாருக்குள்ளான 73 வயது எம்.பி மீது வழக்கு

இதுகுறித்து அவர் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் ஸ்வேதா மேனன் கூறினார்.

இதையடுத்து கொல்லம் எம்.பி. பீதாம்பர குருப்பு மீது கொல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஸ்வேதாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

 

Post a Comment