சென்னை: கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய், மாதவன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த 7ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் தனது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், மூன்று சக்கர வாகனங்களை அளித்தார்.
முன்னதாக தனது வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் அவர் தனது பிறந்தநாளையொட்டி திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.
அந்த பார்ட்டியில் நடிகர்கள் விஜய், மாதவன், சந்தான பாரதி, இயக்குனர் பிரியதர்ஷன், கிரேஸி மோகன், நடிகை ஆண்ட்ரியா, விஸ்வரூபம் 2 படக்குழுவினர் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment