தமிழில் மீண்டும் பிஸியான தமன்னா... ஆர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும் நாயகி!

|

சரியாக இரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு தமிழில் மீண்டும் பிஸியாகிவிட்டார் தமன்னா.

2010, 2011 ஆண்டுகளில் அடுத்தடுத்து தமன்னா நடித்த படங்கள்தான் வெளியாகின. ஆனால் சுறா மற்றும் சிறுத்தை படங்களுக்குப் பிறகு காணாமல் போனார் தமன்னா. இத்தனைக்கும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டார்.

தமிழில் மீண்டும் பிஸியான தமன்னா... ஆர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும் நாயகி!

இளம் நடிகர் ஒருவருடனான காதல்தான் இதற்கெல்லாம் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அதே நேரம் தெலுங்கு மற்றும் இந்தியில் பரபரப்பாக வலம் வந்தார். கவர்ச்சியிலும் மிச்சம் வைக்காமல் பந்தி வைத்தார்.

தமிழில் ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் ஒப்புக் கொண்ட படம் அஜீத்தின் வீரம். சிறுத்தை படத்தை இயக்கிய சிவா கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டார் தமன்னா.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் படங்களில் நாயகி வாய்ப்பு தருவதாக அவரை அணுகி வந்தனர். இதற்கெல்லாம் ஒப்புதல் தராமல் இருந்த தமன்னா, இப்போது இரு படங்களுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

ஒன்று இயக்குநர் எம் ராஜேஷ் அடுத்து ஆர்யா - சந்தானத்தை வைத்து இயக்கும் புதிய படம். அடுத்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தும் புதிய படம்!

 

Post a Comment