சென்னை: சிவகார்த்திகேயன் தனது மகளுக்கு ஆராதனா என்று பெயர் வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் மனைவி கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி மதுரையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் வைத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தற்போது திருக்குமரன் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் சேர்ந்து மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் டணா என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
மான் கராத்தே படப்பிடிப்பில் சிவா ஹன்சிகாவை ஹன்சிகாஜி என்று மரியாதையோடு அழைக்கிறாராம்.
Post a Comment