மும்பை: மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக இதில் யாரும் காயம் அடையவில்லை.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களாவான மன்னத் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது. அங்கு அவர் தனது மனைவி கௌரி கான், மகள் சுஹானா, இளைய மகன் ஆப்ராம் ஆகியோருடன் வசித்து வருகிறார். மூத்த மகன் ஆர்யன் லண்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மன்னத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏழாவது மாடியில் உள்ள பாத்ரூமில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
மேலும் தீயணைப்பு துறைக்கும், ரிலையன்ஸ் டெக்னீஷியன்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்தவர்களே தீயை அணைத்துவிடட்னர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment