கோச்சடையான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது!!

|

சென்னை: ரஜினியின் பிறந்த நாளன்றும் கோச்சடையான் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது. அநேகமாக இந்தப் படம் ரஜினிக்கு ராசியான ஏப்ரல் 14-ம் தேதிதான் வெளியாகும் என்று தெரிகிறது.

ரஜினி உடல் நலம் பெற்று வந்த பிறகு தொடங்கிய படம் கோச்சடையான்.

கோச்சடையான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது!!  

கேஎஸ் ரவிக்குமாரின் கதை-திரைக்கதை-வசனத்தில், சவுந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் ஒரு டீசரும், ஒரு பாடலின் ஒலிக் கோப்பும் மட்டும் இதுவரை வெளியாகியுள்ளன.

பல முறை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போடப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் ஆடியோ அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும், படம் ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் என்றும் செப்டம்பர் மாதம் அறிவித்தனர்.

அக்டோபர் மாதம் முடிந்த நிலையிலும் படத்தின் இசை வெளியாகவில்லை.

எனவே டிசம்பர் 12-ம் தேதி இந்தப் படம் வெளியாவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

அநேகமாக ரஜினிக்கு ராசியான ஏப்ரல்14- ம் தேதி கோச்சடையான் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Post a Comment