சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ஒன்றேகால் கோடி என்றும், அதையும் ஒரே தவணையில் கொடுக்க ஒப்புக் கொண்டதாலேயே அவர் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பாண்டிராஜ் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக பாண்டிராஜ் அறிவித்ததிலிருந்து பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன.
ஆனால் இந்தப் படத்தை நயன்தாரா ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம், குறைந்த தேதிகள் மற்றும் அதிகபட்ச சம்பளம். கூடவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கப் போகும் பரபரப்பு பப்ளிசிட்டி போன்றவைதானாம்.
இந்தப் படத்துக்கு அவர் குறைந்த நாட்கள் கால்ஷீட் தந்தாலே போதும் என்று பாண்டிராஜ் உறுதியளித்திருக்கிறார். காரணம் சிம்பு தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே ஷூட் செய்யப்பட்டுவிட்டன.
இதைத் தவிர, ஒன்றேகால் கோடி ரூபாயை ஒரே பேமெண்டாகத் தர தயாரிப்பாளரான சிம்புவும் ஒப்புக் கொண்டாராம்.
பிரஸ் மீட் வைக்கவில்லை, ஒரு விளம்பரம் வெளியிடவில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரம், இன்னும் பெயர் கூட வைக்கப்படாத இந்தப் படத்துக்குக் கிடைத்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் சிம்பு - நயன்தாரா ஜோடிதான். எனவே படத்துக்கு இது பெரிய பலம், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக பீல்டில் நிற்க உதவும் என்பதையெல்லாம் மனதில் வைத்தே இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறாராம்.
Post a Comment