சென்னை: விக்ரம் பிரபு நடித்துள்ள இவன் வேற மாதிரி படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.
கும்கி படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்துள்ள படம் இவன் வேற மாதிரி. அவருக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்துள்ளார். படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார்.
படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்த சென்சார் போர்டு எங்கும் கத்தரி போடாமல் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து தயாரித்துள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.
வாழ்த்துக்கள் விக்ரம்.
Post a Comment