புதுசுகளா வருதுக: இனி கதையை கேட்டுட்டுத் தான் நடிக்கணும்- நடிகை முடிவு

|

சென்னை: இத்தனை நாட்களாக கதையை கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்ட மங்களகரமான மேனன் நடிகை தற்போது கதையை கேட்க முடிவு செய்துள்ளாராம்.

கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரை உலகில் ஓடி ஓடி நடித்து வருபவர் மங்களகரமான மேனன் நடிகை. அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். நாம் நடிக்கும் படம் எல்லாமே ஹிட்டாகிவிடுகிறதே சம்பளத்தையும் உயர்த்தலாமே என்று முடிவு செய்தார். அதன்படி சம்பளத்தை ரூ.40 லட்சமாக உயர்த்தினார்.

அவர் சம்பளத்தை உயர்த்தினாலும் இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அம்மணி இத்தனை நாட்களாக கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்நிலையில் இனிமேல் கதையை கேட்டுவிட்டுத் தான் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

திடீர் என்று ஏன் இந்த முடிவு என்று நீங்கள் நினைக்கலாம். அம்மணியை நடிக்க வைக்க அவரை பல புதுமுக இயக்குனர்கள் அணுகுகிறார்களாம். அது தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.

 

Post a Comment