மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்பாட் பாய் அசோக் த்ரிமுகே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 19ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ஸ்ருதி ஹாஸனின் வீடு புகுந்து அவரை ஒருவர் தாக்கியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அசோக் த்ரிமுகே என்ற ஸ்பாட் பாயை கைது செய்தனர்.
விசாரணையில் அசோக் கூறுகையில்,
நான் என் தம்பிக்கு ஸ்பாட் பாய் வேலை கேட்டுத் தான் ஸ்ருதி வீட்டுக்கு சென்றேன். அவரை பயமுறுத்த செல்லவில்லை. அவர் தான் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்தினார் என்றார்.
இந்நிலையில் அசோக் ஜாமீன் கேட்டு பந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் வெளியே வந்த பிறகு ஸ்ருதியை சந்திக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment