கஷ்டப்பட்டால்தான் எந்தப் படமாக இருந்தாலும் பலன் கிடைக்கும், என்று இயக்குநர் செல்வராகவன் கூறினார்.
இரண்டாம் உலகம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்வராகவனிடம், "நீங்கள் இயக்கும் எல்லா படங்களிலும் நீங்களும் கஷ்டப்பட்டு, நடிகர்-நடிகைகளையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று புகார்கள் கிளம்புவது வழக்கமாகிவிட்டது. இது தேவைதானா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த செல்வராகவன், "எந்தப் படமாக இருந்தாலும், கஷ்டப்பட்டால்தான் அதற்கான பலன் கிடைக்கும். அது எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி, நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி, கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்.
இந்த அறைக்குள்ளேயே முழு படத்தையும் எடுத்தால் கூட, நடிகர்-நடிகைகள் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.
எந்த ஒரு வேலையையும் கஷ்டம் என்று நினைக்கக் கூடாது. நான் இயக்குகிற படங்கள் புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் உழைக்கிறேன். 2000-ல் நான் டைரக்டராக வந்தேன். இந்த பதிமூன்று வருடங்களில், எல்லாமே மாறிப்போச்சு. ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கே தாக்குப் பிடிக்கவே முடியாது..," என்றார்.
Post a Comment