சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் சென்னை விநியோக உரிமையைப் பெற்றுள்ளார் இயக்குநர் ராம நாராயணன்.
பொங்கலை முன்னிட்டு அஜீத்தின் ‘வீரம்', விஜய்யின் ‘ஜில்லா' ஆகிய படங்கள் மோதுகின்றன.
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10-ம் தேதி ரிரீஸ் என்று சொல்லப்பட்டாலும் இன்னும் சந்தேக நிலை நிலவுகிறது.
7 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்தின் ஆழ்வார் படத்துடன் விஜய்யின் போக்கிரி மோதியது. அன்று ஆழ்வார் படுதோல்வியைச் சந்தித்தது. போக்கிரி வசூலில் வெளுத்து வாங்கியது.
இந்த முறையும் அஜீத்தின் வீரத்துடன் பலப்பரீட்சை செய்து பார்க்கவும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார் விஜய்.
இப்போதைக்கு இவ்விரு படங்கள் மட்டும் பொங்கலுக்கு உறுதியாகியுள்ளதால் அதன் வியாபாரங்கள் துவங்கிவிட்டன. இதில் கொஞ்சம் முன்பாகவே ‘ஜில்லா' படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டது. தியேட்டர் புக்கிங்கும் படுவேகமாக நடந்து வருகிறது.
தற்போது அஜீத் படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடு பிடித்துள்ளது. 'வீரம்' படத்தின் சென்னை, என்.ஏ.சி.ஏரியாவின் விநியோக உரிமையை இயக்குனர் இராம நாராயணனின் ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, என்எஸ்சிதான் (வட, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு) பெரிய ஏரியாக்கள். அதிக தியேட்டர்கள் உள்ள ஏரியாக்கள் இவை.
மற்ற ஏரியாக்களுக்கான வீரம் பட வியாபாரம் நடந்து வருகிறது.
Post a Comment