மொரீஷியஸ் நாட்டில் "புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு” சத்தியம் டிவி நேரடி ஒளிபரப்பு

|

போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில், நவம்பர் 8, 9,10 ஆகிய 3 நாட்களாக புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை சத்தியம் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைகளை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இலங்கை அரசின் மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அங்கு காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் உலக தமிழினம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை பிரதிபலிக்கும் விதமாக புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து மாநாட்டை நடத்துகின்றனர்.

மொரீஷியஸ் நாட்டில்

20 நாடுகளைச்சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் , பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலகத்தமிழர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளும் அந்த மாநாட்டு நிகழ்வுகளை பிரத்யேகமாக பதிவு செய்வதற்காக சத்தியம் தொலைக்காட்சிக் குழுவினர், செய்தித்துறை தலைவர் சீனு விஜயரங்கம் தலைமையில், மொரீசியஸ் தீவிற்கு நேரடியாகச் சென்றுள்ளனர்.

அந்த மாநாடு குறித்த செய்திகளை உடனுக்குடன் தருவதோடு, மொரீஷியஸ் நாடு மற்றும் அதன் கலாச்சாரம் தொடர்பான செய்தித்தொகுப்புகளையும் சத்தியம் தொலைக்காட்சி வழங்குகிறது.

மாநாட்டில் பங்கேற்கும் தமிழர் பிரதிநிதிகளுடனான சிறப்பு நேர்காணல்களையும் உடனுக்குடன் சத்தியம் தொலைக்காட்சி செய்திகளில் வழங்குகிறது. இந்த நேரடி காட்சி தொகுப்புகளை ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் www.sathiyam.tv என்ற இணையதளத்திலும் மற்றும் சத்தியம் தொலைக்காட்சியிலும் காணலாம்.

 

Post a Comment