வெள்ளித்திரை, சின்னத்திரை... அடுத்து இணையத் திரைக்கும் படமெடுக்கும் ஏவிஎம்!

|

சென்னை: தமிழ் சினிமாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் அடுத்து ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த முறை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறு படங்களை, இணையத்துக்காக தயாரிக்கிறது.

தங்களின் முதல் இணையத் தயாரிப்புக்கு ஏவிஎம் நிறுவனம் வைத்துள்ள பெயர் 'இதுவும் கடந்து போகும்'.

வெள்ளித்திரை, சின்னத்திரை... அடுத்து இணையத் திரைக்கும் படமெடுக்கும் ஏவிஎம்!

இந்தப் படம் 55 நிமிடங்கள் ஓடக்கூடியது. சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ், ஷில்பா பட், ரவி ராகவேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் முழுமையாக முடிந்து, வெளியீட்டுக்கும் தயாராக உள்ளது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிரபாகர் எழுத, அவருடன் இணைந்து படத்தை இயக்கியுள்ளார் அனில் கிருஷ்ணன்.

இந்தப் புதிய முயற்சிக்கு ஏவிஎம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:

"சின்னத் திரைப்படம் மற்றும் திரைப்படங்களுக்கு எதிர்கால ஊடகமாக இணையம் வளர்ந்து வருகிறது. அதனை உணர்ந்து, அந்த வளர்ச்சியில் பங்கு பெற ஏவிஎம் அதற்கான படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் முதற்படிதான் இதுவும் கடந்து போகும் என்ற ஒரு மணி நேரப் படம்!"

இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

 

Post a Comment