ஒரு சினிமா மேட்டரில் எப்படியாவது ரஜினி பெயரை கோர்த்துவிட்டு பரபரப்பாக்குவது பாலிவுட்டுக்கு கைவந்த கலை.
இந்த முறை சன்னி லியோன் படத்துக்கு ரஜினி பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 12-ம் தேதி கோச்சடையான் வெளியாகாததால், அந்தத் தேதியில் சன்னி லியோன் படம் ரிலீசாகும் என தெரிவித்துள்ளனர்.
ஜிஸ்ம் 3 படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான செக்ஸ் பட நடிகையான சன்னி லியோனுக்கு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் அவர் நடித்து வெளியாகும் இரண்டாவது இந்திப் படம் ஜாக்பாட். கைஸட் கஸ்டாட் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ள மொழிகளில் வரும் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி அன்றைய தினம் இந்தப் படம் வராது என இப்போது தெரிய வந்துள்ளது.
எனவே டிசம்பர் 13-ம் தேதி சன்னி லியோன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
"ரஜினி படம் வந்தால் எல்லோரும் அவர் படத்தைப் பார்க்கத்தான் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் பாலிவுட்டில் அவர் படத்துடன் மோத வேண்டாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இப்போது அவர் படம் தள்ளிப் போயுள்ளதால் தைரியமாக எங்கள் படத்தை முன்கூட்டியே வெளியிடுகிறோம்," என்று இயக்குநர் கஸ்டாட் தெரிவித்துள்ளார்.
தன் படம் முன்கூட்டியே, அதுவும் ரஜினி படம் வெளியாகவிருந்த தேதியில் ரிலீசாவது சந்தோஷமாக உள்ளதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
காலக் கொடுமடா சாமீ!
Post a Comment