ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு ஆதாரம் தரட்டுமா?- வைர வியாபாரி

|

ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு ஆதாரம் தரட்டுமா?- வைர வியாபாரி

சென்னை: நடிகை ராதாவின் புகார்களுக்கு பதிலளித்துள்ள வைர வியாபாரி பைசூல், 'ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு ஆதாரங்களை நான் காட்டுகிறேன்,' என்று கூறியுள்ளார்.

ராதாவின் பேட்டி மற்றும் புகார் குறித்து, தொழில் அதிபர் பைசூலிடம் விசாரித்த போது, அவர் கூறியவை:

நடிகை ராதாவின் புகார் மற்றும் பேட்டி விவரங்களை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் என்மீது சொன்ன குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை. அவற்றை நான் மறுக்கிறேன். அவரது புகாரை நான் சட்டப்படி சந்திப்பேன். நியாயப்படி நான்தான் அவர் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு பெண் என்று இரக்கப்பட்டு, அவர் மீது புகார் கொடுக்காமல், அவர் கொடுத்த தொல்லைகளை நான் சமாளித்து வந்தேன். அரசியல்வாதிகள் மூலம் அவர் என்னை மிரட்டி வந்தார். தயாரிப்பாளர் என்ற முறையில் நான் அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, என்னை அவமானப்படுத்தியுள்ளார்.

அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரமாக அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது வருமான வரித்துறை பான் கார்டு நகல்கள் உள்ளன.

பான் கார்டில் அவரது கணவர் பெயர் என்ன போடப்பட்டுள்ளது, பாஸ்போர்ட்டில் அவரது கணவர் பெயர் என்ன என்று போடப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆதாரங்களை நான் சென்னை வந்ததும், போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுப்பேன்.

அவர் எனக்கு அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். தகவல்களில் கூட நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவர் என்னை ஜெயிலுக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். நான் அவரை ஒரு முறை அல்ல, பல முறை ஜெயிலுக்கு அனுப்புவேன்," என்றார்.

 

Post a Comment