சென்னை: நடிகை ஸ்ரேயா ஓய்வு பெற வேண்டும் என்று காஜல் அகர்வால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரேயா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார்.
அடடா ஸ்ரேயா ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிட்டாரே என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து அவருக்கு மவுசும் கூடியது. ஆனால் அப்படியே மவுசு குறைந்து தமிழ் படங்களில் காணாமல் போய்விட்டார்.
அவர் அண்மையில் நடித்த கன்னட படமான சந்திரா தமிழிலும் வெளியானது. ஆனால் அவர் நினைத்தது போன்று படம் ஓடவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஒருவர் தற்போது ஓய்வு பெற வேண்டும் என்றால் யாரின் பெயரை கூறுவீர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவரோ சட்டென்று ஸ்ரேயா பெயரை கூறிவிட்டார். காஜலின் இந்த பதில் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment