சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வரும் வம்சம் தொடரின் இயக்குநர் சி.ஜே.பாஸ்கர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். காரணம் தொடரின் கிரியேட்டிவ் ஹெட் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மனக்கசப்புதான் என்கிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இயக்கிய கதைகளையே மீண்டும் சீரியலாக எடுக்கச் சொன்னால் அது முடியாது என்கிறார் சி.ஜே. பாஸ்கர்.
சீரியலுக்கு என்று புத்தம் புதிய நடிகைகளை கொண்டுவரவேண்டும் என்று கூறும் சி.ஜே பாஸ்கர் தன்னால் அந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்கிறார்.
சித்தியில் தொடங்கிய சி.ஜே.பாஸ்கர். அண்ணாமலை, சித்தி, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்திரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார்.
சன் டிவியில்
சி.ஜே. பாஸ்கர் பெரும்பாலும் சன் டிவிக்காகத்தான் பல்வேறு தொடர்களை இயக்கியுள்ளார். சி.ஜே. பாஸ்கரின் முதல் டிவி தொடர் ராதிகாவின் சித்தி. இதை சன் டிவி ஒளிபரப்பியது. இதில் நாயகியாக நடித்தவர் ராதிகா. முக்கிய பாத்திரத்தில் நீனா, அஞ்சு ஆகியோர் நடித்தனர்.
அண்ணாமலையில் விலகல்
இதையடுத்து அண்ணாமலை தொடரை இயக்கினார். இதிலும் ராதிகாதான் ஹீரோயின். இருப்பினும் பல இளம் நடிகைகள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இருப்பினும் இதன் பிற்பாதியில் அதிலிருந்து விலகி விட்டார். ராதிகாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
நாயகிகள் அறிமுகம்
கெளசல்யா, சங்கவி, மல்லிகா ஆகியோரை சின்னத் திரைக்கு அழைத்து வந்தவர் பாஸ்கர்தான். இவர்கள் தவிர ப்ரீத்தி, தீபா வெங்கட், மஞ்சரி, யுவராணி, நளினி, லதா, மீரா வாசுதேவன், சீதா, சந்தோஷி, தேவதர்ஷினி, திவ்யதர்ஷினி, தேவி, புவனேஸ்வரி, நீனா, சுஜிதா உள்பட ஏராளமானோர் பாஸ்கரின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.
சீரியல் இயக்குநர்
சன் டிவியில் மனைவி தொடரை இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. அடுத்து சன் டிவியின் இன்னொரு மெகா தொடரான அஞ்சலியையும் இவர் இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் சினிமா நடிகை மல்லிகா. முக்கிய கேரக்டரில் நடித்த இன்னொரு நடிகை தேவிப்பிரியா. அதேபோல சன் டிவியில் பாஸ்கர் இயக்கத்தில் இடம் பெற்ற இன்னொரு முக்கிய தொடர் பெண். மீரா வாசுதேவன் நாயகியாக நடித்தார்.
ரம்யாகிருஷ்ணனின் வம்சம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணன் நடிக்கும் வம்சம் தொடரை இயக்கினார் சி.ஜே.பாஸ்கர். இதில்தான் இடையில் பிரச்சினை ஏற்பட்டு விலகிவிட்டார். காரணம் கேட்டால் சீரியல் இயக்குவதில் ஏற்பட்ட வெறுப்புதான் என்கிறார்.
குண்டு நடிகைகள்
வம்சம் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகையர்களை தேர்வு செய்யக் கூட தனக்கு சுதந்திரம் இல்லை என்றும் குண்டு குண்டு நடிகைகளை தன்னால் இயக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
காமெடி சீரியல்
இனிமேல் அடுத்தவன் குடும்பத்தை கெடுப்பது போல சீரியல் இயக்கப் போவதில்லை என்று கூறியுள்ள சி.ஜே.பாஸ்கர், கலகலப்பாக காமெடித் தொடர்களை இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.
Post a Comment