சென்னை: நடிகர் சூர்யா கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தருமாறு ஒரு கும்பலை அணுகியதாக தெலுங்கு செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் செயல்படும் பிரபல செய்தி சேனல் ஏபிஎன் நியூஸ். அந்த சேனல் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் கும்பல் பற்றி ஒரு விசாரணை நடத்தியது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவின் மகன் தாரக ராமா ராவ், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த கும்பலை அணுகி தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தர கேட்டது தெரிய வந்துள்ளது என்று ஏபிஎன் தெரிவித்துள்ளது.
சூர்யா அந்த கும்பலை அணுகி ரூ.10 முதல் ரூ.100 கோடி வரையிலான கருப்பு பணத்தை மாற்றித் தருமாறு கேட்டதாக அந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அந்த கும்பலுக்கு பெரிய தொகையை வழங்கவும் சூர்யா ஒப்புக் கொண்டதாக ஏபிஎன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த அந்த சேனல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, இதெல்லாம் படு அபத்தமான தகவல்கள்.. சூர்யா அப்படிப்பட்டவருமல்ல. அரசுக்கு சரியாக வரி செலுத்தி வரும் இளம் நடிகர்களுள் முதன்மையானவர் என சூர்யா தரப்பில் தெரிவித்தனர்.
சூர்யா மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு கடுப்பு!
+ comments + 2 comments
idhila good or bad is not a question
surya will have black money is sure
conversion is his problem
he is not budha as u are depicting
i am not sure about this news
surya benami production house is gnanavel rak green studios'
the whole world knows about this
may be a correct news
Post a Comment