வடகறி படத்தில் ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போடுகிறார் பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி
இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் வீச்சை அதிகரிக்கவும் பரபரப்பு கிளப்பவும் புதிய யோசனையாக, இந்தி நடிகை சன்னி லியோனை ஒரு பாடலுக்கு நடிக்க வைக்க முடிவு செய்தனர் படக்குழுவினர். இதற்காக மும்பைக்கே போய் சன்னி லியோனிடம் பேசி பெரும் தொகைக்கு ஒப்பந்தமும் செய்துள்ளனர்.
சன்னி லியோன் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள செக்ஸ் பட நடிகை மற்றும் இயக்குநர். பாலிவுட்டில் ஜிஸ்ம் 3 படத்தில் அறிமுகமானார். அவருக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்புதான் கூறியிருந்தார்.
இப்போது வடகறி குத்தாட்டத்தோடு தமிழ் சினிமாவில் நுழைகிறார்.
சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ள செய்தியை, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment