சென்னை: தன் மீது சென்னை நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் கைதாவதைத் தவிர்க்க, நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளாராம் நடிகை அஞ்சலி.
சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் கொடுமைபடுத்தியதாக பரபரப்பு பேட்டி அளித்து காணாமல் போய், பின் போலீசாரிடம் ஆஜரானவர் அஞ்சலி.
அன்றிலிருந்து சென்னைக்கே வராமல் ஹைதராபாதிலேயே தங்கியிருக்கிறார்.
தெலுங்குப் படங்களில் மட்டும் நடிக்கிறார். இந்த நிலையில் அஞ்சலிக்கு எதிரான வழக்குகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இயக்குநர் களஞ்சியம் சைதாப்பேட்டை, கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சித்தி பாரதிதேவி அஞ்சலி மாதம் தோறும் ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அஞ்சலி கடைசியாக தமிழில் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இந்த படம் முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. படத்தின் இயக்குநர் களஞ்சியம் இதுகுறித்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கங்களில் அஞ்சலி மீது புகார் அளித்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அஞ்சலிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கல்களிலிருந்து வெளியில் வர வேண்டுமானால் உடனடியாக நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும்.
அதன் பிறகு ஊர் சுற்றிப் புராணத்தில் நடிக்க வேண்டும். எனவே முதலில் சரணடை முடிவுப செய்துள்ளாராம் அஞ்சலி.
Post a Comment