மும்பை: கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சாதனைகள் புரிந்து, இப்போது ஓய்வை அறிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சிகள் நடக்கின்றன.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கராக நடிக்க அமீர்கான் விருப்பம் தெரிவித்துள்ளார். அமீர்கான் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுத்த ‘லகான்' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
எனவே சச்சின் டெண்டுல்கர் வேடத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று கருதுகின்றனர், சச்சின் படத்தை எடுப்பவர்கள்.
இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், "நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். அவர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவர் யாருமிருக்க முடியாது. நிச்சயம் நடிப்பேன், அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும்," என்றார்.
Post a Comment