நெல்லை: விவசாய நிலங்களை விற்காதீர்கள் என நெல்லை அருகே நடந்த மரம் நடும் விழாவில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.
நெல்லை அருகே உள்ளது கோபாலசமுத்திரம் கிராமம். இங்கு உதயம் மற்றும் கீரின் கலாம் அமைப்புகளின் சார்பில் 103486 மரக்கன்றுகள் வழங்கல், நடுதல், பாரமரித்தலுக்கான விழா நடந்தது.
நடிகர் விவேக் தலைமை வகித்து விழாவினை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
நாட்டில் விவசாயத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விவாசயத்தை பாதுகாக்க வேண்டும். வீடு, நிறுவனங்கள் கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விவசாய நிலங்களை விற்க கூடாது. வருங்காலத்தில் விவசாயிகள் தான் பணக்காரர்களாக இருப்பார்கள்.
ஒரு காலத்தில் வந்தாரை வாழ வைக்கும் நாடாக தமிழ்நாடு இருந்தது. இன்று அனைவரும் ரேசன் கடை வரிசையில் நிற்கின்றனர். மரங்களை இழந்ததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பசுமையாக இருந்த தமிழ்நாடு இன்று தள்ளாடி வருகிறது. இந்த நிலை மாற அதிக மரங்களை நட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவுக்கு கோபாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மரக்கன்றுகள் வழங்கினார். கிரீன் கலாம் அமைப்பி்ன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அப்துல் கனி, நடிகர் செல் முருகன், கிராம உதயம் இயக்குனர் சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment