வாடி வாசலில் ஆர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்!

|

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஸ்ருதிஹாஸன். இந்தப் படத்துக்கு வாடி வாசல் என தலைப்பிட்டுள்ளனர்.

'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவரும் ஆர்யாவும் இணைவதாக முதலில் செய்தி வெளியானபோது அதை மறுத்த மகிழ் திருமேனி, பின்னர் ஆர்யாவுடன் படம் செய்வது உண்மைதான் என அறிக்கை வெளியிட்டார்.

வாடி வாசலில் ஆர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்!

ஹீரோயினாக முன்னணி நடிகையுடன் பேசி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இப்போது அந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஹீரோயின் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் முதல்முறையாக ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் இணைகிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்.

'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகும் வாடிவாசல் மதுரையை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இருக்கும் என்கிறார்கள்.

‘நான் அவன் இல்லை', ‘அஞ்சாதே', ‘மாப்பிள்ளை', ‘போடா போடி' ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.

 

Post a Comment