சென்னை: ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி 16 வயதினிலே படம் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கடந்த 1977ம் ஆண்டு ரிலீஸான படம் 16 வயதினிலே. பாரதிராஜா இயக்கிய படத்தில் கமல் ஹாஸன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதாபாத்திரங்களான சப்பானி, பரட்டை, மயிலு மிகவும் பிரபலம். இந்நிலையில் 36 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை தற்போது டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.
படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை கலைப்புலி எஸ். தாணு ரிலீஸ் செய்கிறார். படம் தமிழகத்தில் 350 ஸ்கிரீன்களிலும், கர்நாடகத்தில் 55 மற்றும் மும்பையில் 10 ஸ்கிரீன்களிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
16 வயதினிலேவை மறுபடியும் பார்க்க தயாராகுங்கள் ரசிகர்களே!
Post a Comment