விசேஷ நாட்களைத் தவிர, மற்ற காலங்களில் புதிய தமிழ்ப் படங்கள் வழக்கமாக வெளியாகும் தினம் வெள்ளிக்கிழமை.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது மூன்றுமுதல் அதிகபட்சம் ஒரு டஜன் படங்கள் வரை வெளியாவது வழக்கம். சின்ன பட்ஜெட் படங்கள், பிறமொழிப் படங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய கணக்கு இது.
ஆனால் இந்த ஆண்டில் முதல் முறையாக இன்றுதான் (வெள்ளி) ஒரு தமிழ்ப் படம் கூட வெளியாகவில்லை.
காரணம், புதிய படங்கள் வெளியாகும் பெரும்பாலான தியேட்டர்களில் தீபாவளிப் படங்களான பாண்டிய நாடு, ஆரம்பம், அழகுராஜா போன்றவை வெளியாகியுள்ளன.
இவற்றில், பாண்டிய நாடு படத்துக்கு, அதன் ரிலீசுக்குப் பிறகு கூடுதலாக 75 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் இன்று வெளியாகவிருந்த சில சின்ன படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை. இவை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் தீபாவளிப் படங்களுக்கு 15 நாட்கள் வரை வசூலிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் என்று சொல்லப்படும் படம் கூட, இந்த இடைவெளியில் போதுமானவரை வசூலித்துவிட முடியும் என்பதால் தயாரிப்பாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
Post a Comment