தோல் உரிந்து, முட்டி பெயர்ந்தும் விடாமல் ஆடிய நடிகை!

|

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ராம் லீலா படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுகையில் முட்டி தோல் பெயர்ந்தும் அதை கண்டு கொள்ளாமல் ஆடியுள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்பீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவை வைத்து எடுத்துள்ள படம் ராம் லீலா. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா குத்தாட்டம் போட்டுள்ளார்.

தோல் உரிந்து, முட்டி பெயர்ந்தும் விடாமல் ஆடிய நடிகை!

இந்த குத்துப் பாட்டுக்கு முதலில் ஐஸ்வர்யா ராய் ஆடுவதாக இருந்தது. இறுதியில் அந்த வாய்ப்பு பிரியங்காவுக்கு சென்றது.

குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய பிரியங்கா பற்றி டான்ஸ் மாஸ்டர் விஷ்ணு தேவா கூறுகையில்,

தோல் உரிந்து, முட்டி பெயர்ந்தும் விடாமல் ஆடிய நடிகை!  

பிரியங்கா டான்ஸ் ஸ்டெப்ஸ்களை விரைவில் புரிந்து கொண்டார். அவர் தனது முழங்காலால் வட்டமிட வேண்டி இருந்தது. அப்போது அவரது முட்டித் தோல் பெயர்ந்துவிட்டது. இருப்பினும் அவர் அதை கண்டு கொள்ளாமல் ஆடி முடித்தார் என்றார்.

ராம் லீலா வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 

Post a Comment