மும்பை: இது மும்பை... நாம்தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்... பத்திரமா இரும்மா ஸ்ருதி என தன் மகளுக்கு அன்புடன் அறிவுரை கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன்.
நேற்று முன்தினம் கமல் ஹாஸனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாஸன் அவரது மும்பை வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார்.
சட்டென்று சுதாரித்துக் கொண்டதால், பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்தார் ஸ்ருதி.
இந்த சம்பவம் பாலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சக நடிகர் நடிகைகள் இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ருதியின் தந்தை கமல்ஹாஸன் நேற்று முன்தினம் மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.
கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த கமல் ஹாஸன் இதுகுறித்து கூறுகையில், "நேற்று ஸ்ருதியுடன் பேசினேன். அவர் இப்போது மும்பையில் நலமாக உள்ளார். அவருக்கு நான் சொன்னதெல்லாம், இது மும்பை, நாமதான் ரொம்ப கவனமா இருக்கணும். இன்னும் ரொம்ப விழிப்போட இருக்கச் சொன்னேன்.." என்றார்.
Post a Comment