நாய்கள், பூனைகள் என கைவிடப்பட்ட வீட்டு விலங்குகளைத் தேடிப் பிடித்து கரிசனமும் இரக்கமும் காட்டி வந்த நடிகை
இதனால் கேட்பாரற்று தெருக்களிலும் சாலைகளிலும் திரியும் பல தெருநாய்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பூனைகளையும் ஆபத்திலிருந்து காக்க வலியுறுத்தி வருகிறார்.
நாய், பூனை மீது பாசம் காட்டிய திரிஷா தற்போது கழுதைகள் மீது பாசம் காட்ட தொடங்கியிருக்கிறார்.
நாய்களுக்கென்று நாய்கள் தினம் கொண்டாடும் திரிஷா, கழுதைகள் தினம் என்ற தலைப்பில் கழுதைகளுக்கு ரொட்டித் துண்டு போன்ற உணவுகளைத் தருவதுபோன்ற படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அவருடன் வேறு சி்ல நடிகைகளும் கைகோர்த்துள்ளனர்.
விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீடாவின் விளம்பரத் தூதராக இருந்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. கையில் போதிய படங்கள் இல்லாத நிலையில், கிடைக்கிற பொழுதை இப்படி விலங்குகள் நலம் பேணுவதில் கழிக்க ஆரம்பித்துள்ளாராம் த்ரிஷா.
Post a Comment