சென்னை: கூகுள் டிரான்ஸ்லேட்டில் அஜீத் மற்றும் விஜய்யை வைத்து காமெடி நடக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அஜீத் மற்றும் விஜய். இந்நிலையில் கூகுள் டிரான்ஸ்லேட்டில் அவர்களை வைத்து காமெடி நடந்து வருகிறது. கூகுள் டிரான்ஸ்லேட்டில்(Google Translate) dont see idiots movie என்று டைப் செய்து தமிழாக்கம் கேட்டால் விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று வருகிறது.
அதுவே dont see idiot's movie என்று டைப் செய்து தமிழாக்கம் கேட்டால் அஜீத் படம் பார்க்க வேண்டாம் என்று வருகிறது. மேலும் idiot அல்லது idiot's movie ஆகிய வார்த்தைகளின் தமிழாக்கமாக அஜீத் படம் என்று வருகிறது.
இரண்டு பெரிய ஹீரோக்களின் பெயர்களை வைத்து கூகுள் டிரான்ஸ்லேட்டில் வரும் கூத்தை பார்த்து அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
Post a Comment