வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்ட்டியில் அஜீத், கார்த்தி

|

வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்ட்டியில் அஜீத், கார்த்தி

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் விழாவில் அஜீத் குமாரும், கார்த்தியும் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். முன்னதாக நள்ளிரவில் அவருக்கு சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் திரை உலக நண்பர்கள்.

சென்னை ஈசிஆரில் உள்ள ஒரு இடத்தில் தான் இந்த பார்ட்டி நடந்துள்ளது. இதில் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகர்கள் ஜெய், வைபவ், தங்கை வாசுகி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் வெங்கட்டின் மங்காத்தா நாயகன் அஜீத் குமாரும், பிரியாணி நாயகன் கார்த்தியும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

பார்ட்டிக்கு ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, எஸ்ஆர் பிரபு ஆகியோரும் வந்துள்ளனர். நேற்று மதியம் ஆர்கேவி ஸ்டுடியோவில் குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் வெங்கட். விருந்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தைக்கும் அன்று தான் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொண்ட அவர் அந்த குழந்தையுடன் சேர்ந்து கேக் வெட்டினார்.

 

Post a Comment