ராஜேஷ் படத்தில் சந்தானம் இருக்காரா... இல்லையா?

|

இயக்குநர் ராஜேஷ் படம் என்றதும்... அப்ப சந்தானம் கட்டாயம் இருப்பார் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே மற்றும் அழகுராஜா என தான் இயக்கிய நான்கு படங்களிலும், ஹீரோவைவிட காமெடியன் சந்தானத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் ராஜேஷ்.

ஆனால் அழகுராஜா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தவறிவிட்டதால், உடனடியாகத் தொடங்கும் தனது அடுத்த திரைப்படத்தில் சந்தானத்துக்கு பதில் வேறு ஒரு காமெடி நடிகரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் ராஜேஷ் என பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

ராஜேஷ் படத்தில் சந்தானம் இருக்காரா... இல்லையா?

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பரோட்டா சூரி நடிப்பார் என சிலர் கிளப்பிவிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் ராஜேஷ் தரப்பில் இதுபற்றி எதுவும் அதிகாரப்பூர்வமாகக் கூறவில்லை.

சந்தானமும் ராஜேஷும் மிக நெருக்கமான நண்பர்கள். சந்தானத்துக்காகவே கமல் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றுகிறார் ராஜேஷ். அப்படி இருக்கும்போது, எதற்காக அல்லது யாருக்காக சந்தானமும் ராஜேஷும் பிரிய வேண்டும்? என கேள்வி எழுப்புகின்றனர் ராஜேஷின் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

அதானே.. எதற்கு பிரியணும்.. இணைந்தே இருந்து இன்னொரு அசத்தல் காமெடியைத் தரலாமே!

 

Post a Comment