பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்துக்கு தலப்பாக்கட்டி என பிரபல பிரியாணி கடையின் பெயரைச் சூட்டியுள்ளனர்.
கும்கி மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. முதல் படம் வெற்றி பெற்றதும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவர் அவசரப்படாமல் நிதானமாக தனக்கான படங்களைத் தேர்வு செய்து வருகிறார்.
இப்போது சிகரம் தொடு, இவன் வேற மாதிரி ஆகிய இரு படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, அடுத்து ஒப்புக் கொண்டுள்ள புதிய படத்துக்கு தலப்பாக்கட்டி என்று தலைப்பிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை சத்ய சிவா இயக்குகிறார். கிருஷ்ணா - பிந்து மாதவி நடித்த கழுகு படத்தை இயக்கியவர் இந்த சத்யசிவா. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார்.
சத்ய சிவா ஏற்கெனவே சிகப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment