இரும்புக் குதிரை படத்திலிருந்து நடிகை லட்சுமிராய் நீக்கப்பட்டுள்ளார்.
‘பரதேசி' படத்தை அடுத்து நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் புதிய படம் ‘இரும்புக் குதிரை'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இன்னொரு நாயகியாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியிருந்தார். யுவராஜ் இயக்குகிறார்.
இப்படத்தில் லட்சுமிராய் பைக் சாகச வீராங்கனையாக நடிப்பதாக இருந்தது. இதற்காக, கடந்த சில நாட்களாக பைக் ஓட்டும் பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தாலும், படப்பிடிப்பில் கலந்து கொள்ள இதுவரை லட்சுமிராய்க்கு அழைப்பு வரவே இல்லையாம்.
இதுகுறித்து படக் குழுவினரிடம் கேட்டால், நாங்கள் லட்சுமிராயை ஒப்பந்தம் செய்யவே இல்லையே... அப்புறம் எங்கே கூப்பிடுவது என்றனர்.
ஆனால் லட்சுமி ராய் இது பற்றிக் கூறுகையில், என்னை ஒப்பந்தம் செய்தது உண்மையே. ஆனால் அவர்கள் என்னை நீக்கியது பற்றி எந்தத் தகவலும் இ்ல்லை... என்னை படப்பிடிப்புக்கு வருமாறு அழைக்கவும் இல்லை, என்றார்.
Post a Comment