சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் வெற்றி நடைபோடுபவர் சிவகார்த்திகேயன். அவர் ஹீரோவாக நடித்த மெரினா படம் தொடங்கி எதிர்நீச்சல் வரை மொத்தம் 6 படங்கள் ரிலீஸாகி உள்ளன.
தற்போது அவர் மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டணா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். 6 படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அவர் ஆடி கார் வாங்கியுள்ளார்.
மனிதர் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரோ தான் சம்பளம் பற்றி கறாராக இல்லை என்கிறார்.
சிவகார்த்திகேயன் அண்மையில் தான் பெண் குழந்தைக்கு அப்பாவானார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த கையோடு புதிய கார் வாங்கியுள்ளார் சிவா. வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவரே, வாழ்த்துக்கள்...
Post a Comment