மாமா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் மாப்பிள்ளை தனுஷ்?

|

மும்பை: தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

தனுஷ் நடிக்க வந்ததில் இருந்து இதுவரை தனது மாமனார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்ததில்லை. ரஜினியின் ஸ்டைல், எளிமையை ரசிக்கும் தனுஷுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாமா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் மாப்பிள்ளை தனுஷ்?

தனுஷை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல்.ராய் அடுத்ததாக தான் எடுக்கும் படத்தில் தனுஷையும், ரஜினியையும் நடிக்க வைக்கிறாராம்.

இது குறித்து பிரபல வினியோகஸ்தர் கிரிஷ் ஜோஹார் ட்விட்டரில் கூறுகையில்,

ஆனந்த் ராய் தனது அடுத்த படத்தில் நடிக்க மெகாஸ்டார் ரஜினிகாந்த் சர் மற்றும் தனுஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளார் என்று செய்திகள் வருகின்றன... இது உண்மையாக இருக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment