சென்னை: நாம் ஏற்கெனவே சொன்னதுபோல, சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. ஆனால் தயாரிப்புதான் வேறு... இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கவில்லை. அவரது சகோதரர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கிறது.
இதனை அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை ஞானவேல் ராஜா தெரிவித்தார்.
இதன் மூலம் வெங்கட் பிரபுவுக்கும் ஸ்டுடியோ கிரீனுக்கும் கசமுசா என்று வந்த செய்திகளையெல்லாம் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்!
பிரியாணி படம் பார்த்து திருப்தியடைந்துதான் இந்தப் பட வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்குத் தந்திருக்கிறார் சூர்யா.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "'டிசம்பர 20 ம் தேதி பிரியாணி ரிலீசாகிறது. அதற்கடுத்து ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன், மீண்டும் சூர்யா படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். சிங்கம் 2 படத்துக்குப் பிறகு ஸ்டுடியோ கிரீன் - சூர்யா இணையும் படம் இது. ஹீரோயின் உள்ளிட்ட விவரங்களை விரைவில் அறிவிப்போம்," என ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தெரிவித்துள்ளார்.
Post a Comment