சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன் ஜோடி சேரும் படத்திற்கு சிம்புவின் தம்பியும், விஜய டி.ராஜேந்தரின் இளைய மகனுமான குறளரசன் தான் இசை என்பது ஏற்கனவே நாமறிந்த - நாடறிந்த விஷயம் தான்.
பெயரிடப் படாத அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஒலிப்பதிவு வேலைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி குறளரசின் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளதாகவும், பாண்டிராஜ் படத்தின் முதல் பாடல் பதிவு நடைபெற்று வருவதாகவும், இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிம்பு.
அதேபோல், பாண்டிராஜூம் தனது பங்கிற்கு குறளரசைப் பாராட்டியுள்ளார். அதில், நிச்சயமாக மிகவும் அருமையான பாடல். ரொம்ப சந்தோஷம். நன்றி குறள். பிரகாசமான எதிர்காலம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது' என வாழ்த்தியுள்ளார்.
பிறகென்ன, அப்பாவை வச்சு ஒரு பட்டையைக் கிளப்பும் பாாட்டையும் போட்டு்ட்டா.. இன்னும் பிரமாதமா இருக்கும்ய்யா...!
Post a Comment