திருநாள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த நடிகர் விஜய்

|

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ளது சனீஸ்வர பகவான் கோவில். இந்த கோவிலில் நவகிரக சாந்திஹோமம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார்.

திருநாள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த நடிகர் விஜய்

சனீஸ்வரன் சன்னதியில் நடந்த ஹோமம் முடிந்ததும் சனீஸ்வரருக்கு தீப வழிபாடு நடைபெற்றது. அப்போது விஜய் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன் பிறகு அவர் சிறப்பு பூஜை செய்தார். பூஜை முடிந்த உடன் அவர் தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள நிலையில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment