சென்னை: ரசிகர்களுக்கு விஜய்யின் கிறிஸ்துமஸ் பரிசாக ஜில்லா டீஸர் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
விஜய், காஜல் அகர்வால் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா. படத்தின் இசை வெளியீட்டு விழா சத்தமில்லாமல் நடைபெற்றது. படத்தில் விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார்.
இசையோடு சேர்த்து படத்தின் டீஸரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீஸர் வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஜில்லா டீஸர் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
படம் ஜனவரி முதல் வாரத்தில் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்படும் என்று தெரிகிறது. படத்தின் அறிமுக பாடல் அண்மையில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா பொங்கல் அன்று ரிலீஸாகவிருக்கிறது.
Post a Comment