இசையமைப்பாளர் தீனா நடுவராகும் இசை மேடை

|

இசையமைப்பாளர் தீனா நடுவராகும் இசை மேடை

கலைஞர் டிவியில் இசை மேடை என்ற புதிய இசை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய பாடகர்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹைனா, தீனா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

‘இசை மேடை' சிறந்த மேடைப்பாடகர்கள் இடையே சிறந்த பாடகரைத் தேர்வு செய்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி .

டிசம்பர் 8ம் தேதி முதல் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

பாடகர்களின் திறமை

இந்த நிகழ்ச்சியில் நல்ல குரல் வளம் இருந்தும் சரியான அறிமுகம் கிடைக்காத பாடகர்கள் மேடையேறி தனி சுற்று, இரட்டைச் சுற்று மற்றும் பாரம்பரிய சங்கீதத்தில் தங்களுக்குள்ள திறமை மற்றும் தேர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

பிரபல இசையமைப்பாளர்களும், திரைப்பட பின்னணி பாடகர்களும், அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். நடுவர்களாக பிரபல இசையமைப்பாளர்கள் தீனா, ஏ.ஆர்.ரஹைனா பங்கேற்றுள்ளனர்.

‘‘இசை மேடை'' ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். கலைஞர் தொலைக்காட்சிக்காக லிபர்டி மீடியா சார்பில் பால் டி.ராஜா தயாரித்து வழங்குகிறார்.

 

Post a Comment