சென்னை: உயர்ந்த நடிகை உடம்பை குறைக்க ஜிம்மே கதி என்று கிடக்கிறாராம்.
யோகா ஆசிரியையாக வாழ்க்கையை துவங்கி நடிகையானவர் அந்த உயர்ந்த நடிகை. தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போதைக்கு அவர் தெலுங்கில் 2 சரித்திர படங்களில் நடித்து வருகிறார்.
நடிகையை பார்த்த தோழிமார்கள் என்ன நீ இவ்வளவு வெயிட் போட்டுட்ட என்று கிண்டலடித்தார்களாம். இதையடுத்து அவர் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு உடற்பயிற்சி செய்து வருகிறாராம். மேலும் நன்றாக சாப்பிடாமல் பழச்சாறு குடித்து உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறாராம்.
சரித்திர படத்திற்காகவும் தான் உடம்பை குறைக்கும் முயற்சியில் அம்மணி இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. வயது ஏறிக் கொண்டே போவதால் கையில் இருக்கும் 2 படங்களை முடித்த பிறகு அவர் திருமணம் செய்து செட்டிலாவாரா என்ற கேள்வி திரை உலகில் எழுந்துள்ளது.
Post a Comment