சென்னை: இவன் வேற மாதிரி ஒரு க்ளாஸ் ஆக்ஷன் படம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
தமிழில் ‘எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன், அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் ‘இவன் வேற மாதிரி'. இப்படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியானது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்தார். பார்த்த கையோடு படத்தைப் பாராட்டி ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதம்:
‘இவன் வேற மாதிரி' படத்தை பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்ஷன் படம். இது வரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இது நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப்படம் வெற்றி பெற்ற என் வாழ்த்துக்கள்.'
Superstar Rajinikanth praised Ivan Vera Mathiri movie as Class Action entertainer.
Post a Comment